Wednesday, October 20, 2010

உறவுக்கு நன்றி!

ஈரைந்து மாதங்கள்
எனைக் கருவறையில் சுமந்திட்ட உறவுக்கும்...

இருபத்தொரு வருடங்கள்
தன் தோளோடு தாங்கிட்ட
உறவுக்கும்...

அழகான இவ்வுலகை நல்
அறிவால் அடையாளம் காட்டிட்ட
உறவுக்கும்...

சிறு சண்டைகள் இட்டாலும்
பெரும் சந்தோஷம் தந்திட்ட
உறவுக்கும்...

தோளொடு எனை சேர்த்து
பல துயரங்கள் துடைத்திட்ட
உறவுக்கும்...

மலர் மாலை தான் சூடி வாழ்கை
வழி நெடுக சேர்த்திட்ட
உறவுக்கும்...

வைரமாய் என்னுள்ளே சிறு
மழலையாய் உதித்திட்ட
உறவுக்கும்...

வாழ்கை எனும் பொருள் விளக்க
நம்மோடு வாழ்ந்து மறைந்திட்ட
பலப்பல உறவுகளுக்கும்...

உறங்கும் தலையணை முதல்
உண்ணும் உணவு வரை...
தான் உழைத்து எனைக் காத்திட்ட
ஒவ்வொரு உறவுக்கும்...

நிறை என்று
வாழும் இவ்வாழ்க்கை
குறை என்று என்னுள் இல்லாது
இறையாக நின்று உணர்ந்திடும்
உறவுக்கும்...

நான் கூறும்...
நன்றி என்ற ஒர்
வார்த்தை போறாது...

ஏனோ இம்மனம்...
நன்றியென்ற
வார்த்தையன்றி வேறு அறியாது!!!

நீயன்று அசையாத
ஒவ்வொரு அணுவையும்
உறவாக
நான் எண்ண நல்மனம்
கொடு இறைவா.....



No comments:

Post a Comment