Wednesday, October 20, 2010

தூக்கம் வேண்டி

தூக்கம் வேண்டி

செல்வம் தான்

வாழ்க்கை எனத்
தேடி நிதம்
நான் சேர்த்தேன்...

அரண்மனை வீடமைத்து
67 அறைகள் வைத்து
தங்கக் கட்டிலில் விரிக்கப்
பட்டுக் கம்பளம்...

மெல்லிய இசைதனில்
மல்லிகை மணத்துடன்
உறக்கம் தேடி
நான் செல்ல...

தூக்கம் என்னை
துரத்தி விட்டு
தழுவிக் கொண்டது என்
வீட்டுத் தோட்டக்காரனை...

எள்ளி நகையாடியது உள்மனம்!!!

ஆற்றப் போவது
பசியை அதில்
2 ரூபாய் அரிசியென்ன?
200 ரூபாய் அரிசியென்ன?

கோடிகள் விலை கொடுத்து
தூக்கத்தை தேடுகிறாய்
ஏழையவள் கந்தலை --- உன்
கைக்குட்டை மறைக்க கொடு....

அந்த காத்தாயி
தாலாட்டு உன்னை
கண்ணுறங்க செய்யுமென்று!!!!!

-----
ப்ரியாகணேஷ்



No comments:

Post a Comment