Tuesday, April 22, 2014

கடற்கரை


இளம்காலை பொழுது, இயற்கையின் வாசம்
சுட்டும் சுடாத சூரியன், தீண்டி செல்லும் தென்றல்
உள் அமைதியை உணரச் செய்யும் சமுத்திரத்தின் கூக்குரல்
பாத ஜோடிகளின் முத்திரை தாங்கிய மணல் பரப்பு

எட்டா வானில் மேகம் தீட்டிய அழகோவியங்கள் 
அதை எட்டி பிடிக்க துள்ளி குதிக்கும் மீன் கூட்டம்
ஒய்யார பொம்மைகளாய் ஆங்காங்கே பனை மரங்கள்
பசி துறக்க பண்டம் தேடும் பறவை கூட்டம்

பரந்த கடலை பங்கு போட பயணிக்கும் இரு பாய்மரப் படகுகள்
நுரை பொங்கும் கடலலையில் துள்ளி குதூகலிக்கும் தலைமுறை
கண பொழுதையும் களவாட துடிக்கும் காதல் கூட்டம்
அப்பப்பா...கவிதை பாட காட்சிகளின் அரங்கேற்றம்...

சுகமாய் தான் இருக்கிறது ஆர்ப்பரிக்கும் கடலலைகள் என் கால் நனைத்து செல்லும் போது......
என்னுள்
சுகமாய் தான் இருக்கிறது ஆர்ப்பரிக்கும் கடலலைகள் என் கால் நனைத்து செல்லும் போது......

No comments:

Post a Comment