பாகம் - 3
நாளை அவள் பிறந்தநாள். ஒரு மாதம் முன்பே எனக்கு பிடித்த உடையும், எனக்கு பிடித்த பரிசு போருளும் அவளுக்கு வாங்கியாயிற்று. அன்று, கடையில் கண்ணாடி பெட்டியில் இருக்கும் 1 டாலர் பொம்மையை ஏக்கமுடம் கேட்கிறாள். பொய்யாக ஒரு சாக்கு சொல்லி சமாதானம் செய்கிறேன். அவள் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏக்கத்தோடு எனக்காய் பலடாலர் பொருளுக்கு தலை ஆட்டுகிறாள். இரவு கதை படிக்கிறேன். கதையின் பொருளாக அதிகம் ஆசைப்படாதே என்று அறிவுறுத்துகிறேன். கடையில் நடந்த நிகழ்ச்சி எண்ணி பார்க்கிறாள். ஒரு சின்ன பொம்மையிடம் ஆசை கொண்டேன், அம்மா விரும்பி வாங்கி தந்தது பெரிய பரிசு பொருள். எதை ஏற்று கொள்வது அம்மாவின் எண்ணத்தையா இல்லை கதையின் பொருளையா? குழப்பம் கொள்கிறாள்.என்னிடம் என்ன எதிர்பார்க்கும்? என் குழந்தை என்று எண்ணி பார்க்கும் நாட்கள் மிக மிககுறைவு. என் எதிர்பார்ப்புகளை அவளிடம் புகுத்த தெரிந்த எனக்கு அவள் எதிர்பார்புகளை ஏற்க தெரியவில்லை என்று கூறுவது அபத்தம். என் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்பது தான் உண்மை. அவளுக்கு பிடித்த சமையல் செய்து அருகில் அமர்ந்து கதை சொல்லி கொஞ்சி குலாவி ஊட்டி விட எதிர்பார்ப்பால். கறிகாய் சேர்க்க எண்ணி எதோ என்று ஒரு சாதம் கூட்டு வைத்து அதை அதட்டியும் மிரட்டியும் உண்ண வைக்கிறேன். என் மனதில் அடுத்து குவிந்து கிடக்கும் வேலைகள் அடுக்காய் வர உணவு ஊட்டும் உற்சாகம் குறைந்து விடுகிறது. அவளுக்காக அழகாய் செய்யும் இந்த வேலை கூட பாரமாய் பெரிதாய் தோன்றுகிறது.
கண்மூடி என்னையே ஆராய்ந்து பார்கிறேன். உள்ளொன்றும், புறமொன்றும் என இரு எண்ணங்களுடன் வாழும் நான் எப்படி என் மகளுக்கு உதாரணம் ஆவேன். குழந்தைகள் அப்படி அல்ல மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளியில் கூறும். அதை அங்கிகரிகாமல் நான் நினைப்பதை நீ நினைக்க வேண்டும் என தள்ளப்படும் பொது குணம் மாறுகிறாள். இரு எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறாள், அவளுக்காகவும் அவள் அன்னைகாகவும். எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையில் அவள் நல்லவள் ஆவதும் கேட்டவள் ஆவதும் அன்னை வளர்ப்பினில் பாடல் என் செவியில் ஒலிக்கிறது.
பிறர் மீது கொண்ட கோபம் குழந்தைகள் மீது பாயும் வழக்கம் காலமாய் இருக்கும் கொடுமை. கோபம் மதியற்றோர் செய்யும் பாவம். குழந்தைகள் செய்வது, அறியாது செய்யும் தவறு. நாம் செய்வது, அறிந்து செய்யும் தவறு.தெரியாமல் செய்தேன் என்று கூறுவது முற்றிலும் தவறு. குழந்தைகள் நமக்கு கிடைத்த வரம், பொம்மை பொருளாய் ஆட்டி வைப்பதை எண்ணி வெட்கம் கொள்கிறேன். சிறு சிறு செயல்களில் செய்யும் தவறு கூட ஒரு குழந்தையின் மனதை மாற்றும் என நாம் நினைவில் கொள்ள மறக்கிறோம். நல்ல கருத்துகளை போதிக்க வேண்டும். அதை விட சிறந்தது நல்ல கருத்துகளாய் நாம் வாழ்ந்து காட்டுவது. புத்தக படிப்பு அறிவை வளர்ப்பது. அதை மட்டும் கருத்தில் கொண்டால் நாம் செய்வது தவறு. நல்லறிவு நற்செயல்களால் மட்டுமே வளரும். நற்செயல்களை கற்று கொள்வது நம்மிடமே.
மனதை நெருடி கொண்டிருக்கும் எண்ணங்களை எழுத எண்ணி முடிவில்லா கட்டுரையாய் நீண்டு கொண்டிருக்கிறது. உண்மையை உணர்ந்து எண்ணங்களை நேர்படுத்தி, என் செயல்களை மாற்றி கொள்ள ஒரு வாய்ப்பாய் இவ்வெழுத்துகள் அமையுமாயின், அது என் எழுதுகோலுக்கு கிடைத்த வெற்றி. தொடரும் இந்த நெருடல் ஒரு முடிவை காணும் வரை.............
நல்ல முயற்சி, கலீல் கிப்ரனின் குழந்தைகள் பற்றிய கவிதை படித்திருக்கிறீர்களா? அதுதான் நினைவுக்கு வருகிறது. பார்க்க
ReplyDeletehttp://www.katsandogz.com/onchildren.html
நன்றி நம்பி. அன்றாடம் நடக்கும் சிறு சிறு தவறுகளை சுட்டி காட்டி, அதை திருத்திக் கொள்ளும் விதமாய் ஒரு முயற்சி. தவறென்று அறியாத, உணராத விஷயங்களும் கூட இதில் அடங்கும்.
ReplyDelete