Tuesday, November 21, 2017




கணக்குது மனம் தேவதை ஒன்று மறைய கேட்டு
கனவுகளை கருக்கும் களவாணி கூட்டம்
கூத்தாடும் கூட்டத்தை குத்துக்காலிட்டு பார்க்கிறேன்
நடப்பதை உணர்த்த துறந்தது ஒரு உயிர்...


7 லட்சம் நிவாரணம்
பேயும் பிசாசும் கூட ஏளனமாய் சிரிக்கும்
மானிடா உன்னை விட நான் சிறந்தவன் என்று
வெட்கி போகிறேன் வேதனையில் 
விதை இட்டது நான் அல்லவா ...


Tuesday, January 24, 2017

நன்றி நன்றி நன்றி சகோதர சகோதரிகளே


ஆதாயம் தேடும் அரசியல் 
உண்மை கூறா ஊடகம் 
வெறியாட்ட விஷமிகள் 
காவலுள் சில கேவலம்.......

எத்தனை வரினும் எத்தனை வரினும்

இழிச்சொல் பழிச்சொல் எதிர்த்து நின்றாய் 
உரிமை காத்தாய் உறவு காத்தாய்
புரட்சிக்கும் ஒரு புரிதல் செய்தாய் 
உலகம் வியக்க வெற்றி கண்டாய்.....

போராடி நீ பெற்ற பொக்கிஷத்தை 
நல் பால் உண்ணும் மகளிடம் 
நாளை,மார்தட்டி புகழச் சொல்வேன்.....

தடம் மாறா தம்பிக்கும் தங்கைக்கும் நான் அக்காள் என்று 
அறம் மாறா அண்ணனுக்கும் அக்காளுக்கும் நான் தங்கை என்று 
அன்பு ஊட்டும் ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் நான் மகள் என்று.......

நன்றி நன்றி நன்றி சகோதர சகோதரிகளே.....


Tuesday, April 22, 2014

கடற்கரை


இளம்காலை பொழுது, இயற்கையின் வாசம்
சுட்டும் சுடாத சூரியன், தீண்டி செல்லும் தென்றல்
உள் அமைதியை உணரச் செய்யும் சமுத்திரத்தின் கூக்குரல்
பாத ஜோடிகளின் முத்திரை தாங்கிய மணல் பரப்பு

எட்டா வானில் மேகம் தீட்டிய அழகோவியங்கள் 
அதை எட்டி பிடிக்க துள்ளி குதிக்கும் மீன் கூட்டம்
ஒய்யார பொம்மைகளாய் ஆங்காங்கே பனை மரங்கள்
பசி துறக்க பண்டம் தேடும் பறவை கூட்டம்

பரந்த கடலை பங்கு போட பயணிக்கும் இரு பாய்மரப் படகுகள்
நுரை பொங்கும் கடலலையில் துள்ளி குதூகலிக்கும் தலைமுறை
கண பொழுதையும் களவாட துடிக்கும் காதல் கூட்டம்
அப்பப்பா...கவிதை பாட காட்சிகளின் அரங்கேற்றம்...

சுகமாய் தான் இருக்கிறது ஆர்ப்பரிக்கும் கடலலைகள் என் கால் நனைத்து செல்லும் போது......
என்னுள்
சுகமாய் தான் இருக்கிறது ஆர்ப்பரிக்கும் கடலலைகள் என் கால் நனைத்து செல்லும் போது......

Tuesday, April 9, 2013

ஒரு கதையால் அறியாது தெரிந்தவை


நண்பர் ஒருவர் புதிர் கொண்ட கதை ஒன்றை நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டார். தெரியாது அறிந்தவையும் அறியாது தெரிந்தவையும் அன்றாட தேடலில் சேர்த்தியுண்டு. ஒரு சிறு கதை கூட என் தேடலுக்கு இத்தனை தீனி போடும் என்று அறியாது போனது இந்த அறிவு. அக்கதையை படித்தபின் தோன்றிய எண்ணங்களை அக்கதையுடன் சேர்த்து இங்கு பதிவு செய்துள்ளேன். 

குணம் அறியாது அதன் மனம் அறியாது
பண்பு அறியாது அதன் பணிவு அறியாது ...

சினம் அறியாது அதன் திறன் அறியாது
புகழ் அறியாது அதன் புதிர் அறியாது ...

விடை அறியாது அதன் வினா அறியாது
கோள்  அறியாது அதன் குறி அறியாது ...

ஊண் அறியாது அதன் உயிர் அறியாது
உளவு அறியாது அதன் உள் அறியாது...

அருள் அறியாது அதன் அறிவு அறியாது
இருள் அறியாது அதன் ஒளி அறியாது ...

விதி அறியாது அதன் மதி அறியாது
இ-தினம் அறியாது என் பிணமும் அறியாது ...

நிதம் ஓடி நான் தேடி சேர்த்தது...

பொருளல்ல இருளா ?
விதையல்ல வினையா?



Story

There was a father who left 17 camels as an asset for his three sons.
When the father passed away, his sons opened up the will.

The Will of the father stated that the eldest son should get half of 17 camels while the middle son should be given 1/3rd (one-third). The youngest son should be given 1/9th (one-ninth) of the 17 camels.
As it is not possible to divide 17 into half or 17 by 3 or 17 by 9, three sons started to fight with each other. So, the three sons decided to go to a wise man.

The wise man listened patiently about the Will.

The wise man, after giving this thought, brought one camel of his own and added the same to 17. That increased the total to 18 camels.

Now, he started reading the deceased father’s will.

Half of 18 = 9. So he gave the eldest son 9 camels
1/3rd of 18 = 6. So he gave the middle son 6 camels
1/9th of 18 = 2. So he gave the youngest son 2 camels.

Now add this up: 9 plus 6 plus 2 is 17 and this leaves one camel, which the wise man took away.

There is solution to every problem. First, we have to believe there is a solution. Sometimes, we may have to start looking outside of the problem to find a solution.......It may not be as simple as finding the 18 th camel but to solve a problem we have to believe that a solution exists and work towards it........

Friday, November 9, 2012

என் வீட்டு விலங்குகள்


என் மகள் செல்லும் தமிழ் வகுப்பில் வீட்டுவிலங்குகள் என்ற தலைப்பில் ஒரு கதை அல்லது கட்டுரை அல்லது கவிதை  அல்லது வரைபடம் செய்து எடுத்து வருமாறு சொல்லி இருந்தனர். அவளுக்காக  வீட்டுவிலங்குகள் பற்றிய ஒரு சிறு பாடல்.

கொக்கரக்கோ கோழி உண்டு
கொண்டை வச்ச செவளுண்டு

தோத்தோ குட்டி நாயுமுண்டு 
தோழனாய் ஒரு பூனை உண்டு

பால் குடுக்கும் பசுவும் உண்டு 
பார்த்து மகிழ முயலும் உண்டு

துள்ளி ஓடும் கன்றும் உண்டு 
தூது செல்லும் புறாக்கள் உண்டு

வண்ண வண்ண மீன்கள் உண்டு 
வார்த்தை பேசும் கிளிகள் உண்டு

பட்டு பாப்பா நண்பர்களாய் , 
இத்துனையும் என் வீட்டில் உண்டு!!!!!!