Friday, November 9, 2012

என் வீட்டு விலங்குகள்


என் மகள் செல்லும் தமிழ் வகுப்பில் வீட்டுவிலங்குகள் என்ற தலைப்பில் ஒரு கதை அல்லது கட்டுரை அல்லது கவிதை  அல்லது வரைபடம் செய்து எடுத்து வருமாறு சொல்லி இருந்தனர். அவளுக்காக  வீட்டுவிலங்குகள் பற்றிய ஒரு சிறு பாடல்.

கொக்கரக்கோ கோழி உண்டு
கொண்டை வச்ச செவளுண்டு

தோத்தோ குட்டி நாயுமுண்டு 
தோழனாய் ஒரு பூனை உண்டு

பால் குடுக்கும் பசுவும் உண்டு 
பார்த்து மகிழ முயலும் உண்டு

துள்ளி ஓடும் கன்றும் உண்டு 
தூது செல்லும் புறாக்கள் உண்டு

வண்ண வண்ண மீன்கள் உண்டு 
வார்த்தை பேசும் கிளிகள் உண்டு

பட்டு பாப்பா நண்பர்களாய் , 
இத்துனையும் என் வீட்டில் உண்டு!!!!!!

நாளைக்கு தீபாவளி

வேணு ஒரு மாதமாய் காத்திருந்த தீபாவளி நாளைக்கு...

நாளைக்கு  தீபாவளி நாளைக்கு  தீபாவளி நாளைக்கு  தீபாவளி...
ஐயோ வேலைக்கு போன அம்மா அப்பா  இன்னும் காணோமே..
பக்கத்துக்கு கடை பட்டாசு தீந்திடுச்சுனா என்ன செய்ய
காலைல முதல்ல எந்திருச்சுடனும்..சோமு வ முந்திடணும்
முதல்ல பட்டாசு போட்றனும்....
நம்ம வீட்டு வாசல் ல தான் குப்ப ரொம்ப இருக்கணும்.....

நாளைக்கு  தீபாவளி நாளைக்கு  தீபாவளி நாளைக்கு  தீபாவளி...
அம்மா என்ன பலகாரம் செய்யும்?
அப்பா என்ன வாங்கி தருவார்?
டிவி ல என்ன நிகழ்ச்சி வரும்?
ஐயோ வேலைக்கு போன அம்மா அப்பா இன்னும் காணோமே..

நாளைக்கு  தீபாவளி நாளைக்கு  தீபாவளி நாளைக்கு  தீபாவளி...
டேய் முருகேசா .. நீ எந்த கலர் டிரஸ் டா?
நான் சிகப்பு  சட்டை ப்ளூ ஜீன்ஸ் டா...
நாளைக்கு பாரு சூப்பர் ஆ இருக்கும்
சோமு என்ன டிரஸ் போடுவான்?

நாளைக்கு  தீபாவளி நாளைக்கு  தீபாவளி நாளைக்கு  தீபாவளி...
புஷ்வானம் கம்பி மத்தாப்பு சரவெடி அணு குண்டு எல்லாம் வாங்கணும்..
நாளைக்கு  தீபாவளி நாளைக்கு  தீபாவளி நாளைக்கு  தீபாவளி...
ஐயோ வேலைக்கு போன அம்மா அப்பா இன்னும் காணோமே.....


வேலையில் அம்மா யோசனை...

நாளைக்கு  தீபாவளி.....
பிள்ள பட்டாசு கேட்டுச்சே ... சிக்கிரம் கிளம்பனும்..
பஜார்ல கூட்டம் நகர முடியாது...
2  மாசம் சேர்த்து வச்ச காசிருக்கு..
பத்திரமா கொண்டு போய் பட்டாசு வாங்கணும்
பாவி மனுசர் அவர் எங்க வாங்க போறார்...
காசை கரியாக்கிற னு புள்ளைய பிடிச்சி திட்டுவார்...
நாளைக்கு  தீபாவளி.....

நாளைக்கு  தீபாவளி.....
என்ன சமைக்கலாம் .. போன வருஷம் ஒன்னும் பண்ணல
இந்த வருசமாவது எதோ செய்வோம்...
மனுசருக்கு போன் போட்டு பலசரக்கு வாங்க சொல்லணும்..
வீட்டை   போய் தூத்து துடைக்கணும்...
நைட் ஏ துணிதுவைச்சி பாத்திரம் கழுவி வைக்கணும்..
வெள்ளன எந்திரிச்சி தலைக்கு ஊத்தணும்....
மலைப்பாய் இருக்கே .. நாளைக்கு  தீபாவளி

வேலையில் அப்பா யோசனை...


வந்திரிச்சி தீபாவளி... நாளையோட முடிஞ்சது..
இனி அடுத்த வருஷம் தான்...
ஒரு மாசமாய் மண்டை காயுது...
தீபாவளி போனஸ் துணி எடுத்தாச்சு..
சலுகைல புது போன் வாங்கியாச்சு..

நாளைக்கு  தீபாவளி...
சீக்கிரம் கிளம்பனும்  கடைசி நேரத்துல கடைக்கு அனுப்புவா..
பட்டாசு வாங்கிருப்பா பிள்ளை கேட்டுருச்சுல .... இருப்பாளா...
எவளோ காசு கரியாகுதோ... புரியாதுங்க...
பத்து கடை ஏறி இறங்கி பேரம் பேசுவா..
வேணு சைக்கிள் ஒன்னு கேட்டான்
ஏதாவது தீபாவளி ஸ்பெஷல் போடுறானா னு பார்க்கணும்.

நாளைக்கு  தீபாவளி...
என்ன சண்முகம் சார் உங்க வீட்டுல என்ன ஸ்பெஷல்
புது துணி பட்டாசு வாங்கியாச்சா? ...
நாளைக்கு சன் டிவி ல சாலமன் பட்டிமன்றம் எத்தன மணிக்கு சார்?
வேற என்ன ஸ்பெஷல் ப்ரோக்ராம் சார்? 
வீட்டுல காத்திருப்பாக சிக்கிரம் கிளம்பனும்..
வரேன் சார்  நாளைக்கு  தீபாவளி...