Monday, May 10, 2010

நெருடல் - 4

பாகம் - 4

நீண்ட இடைவேளிக்கு பின் தோழி ஒருத்தியின் ஊந்துதலில் உதித்த எண்ணங்கள், நெருடலின் தொடர்ச்சியாய்.....

நேற்று அன்னையர் தினம். என் செல்ல மகளின் பள்ளியில் அதற்கான கொண்டாட்டம். கலர் கலர் பாசி கொண்டு நேர்த்தியின்றி என் கைக்கு அவள் தொடுத்த வளையல். என் கண்ணை மூட சொல்லி அணிவிக்கிறாள். அந்த அன்பிற்கு ஈடு இணை ஆகுமா இவ்வுலகில் இருக்கும் அணைத்து செல்வமும். இன்றும் நான் உணர்ந்தேன் முதல் முதலில் ஸ்கேன் இயந்திரத்தில் அவளை என்னுள் கண்ட அந்த சந்தோசத்தை போன்று ஓர் மகிழ்வை. வாரியணைத்து உச்சி முகர்ந்து உள்ளந்தலையில் ஒரு முத்தம் . அவள் முகத்தில் இவுலகையே வென்ற ஒரு மகிழ்ச்சி. என் மகள் என்னிடம் எதிர் பார்ப்பது இதை தானோ. என்னவாக இருக்கும் அவள் சிறு சிறு எதிர்பார்ப்புகள் என்று எண்ணிய போது உதிக்கிறது ஒரு கவிதை

என் செல்ல அம்மா

காலை முத்தம் அன்பாய் வேணும்
கட்டியணைக்க நீ அருகில் வேணும்
செல்ல சினுங்கள் நான் செய்ய வேணும்
நீ கொஞ்சும் கோபம் கொள்ள வேணும்

இரவு கனவு நான் பகிர என்னை
குளிப்பாட்டி தலைவாரி பூச்சூடி
பிடித்த உடை அணிய என்னை நீ
தேவதை என புகழ வேணும்

உன் மடியில் எனை அமர்த்தி
உறவு பலம் அதை உணர்த்தி
உனக்கொரு வாய் என்னகொரு வாய்
என இருவர் பகிர்ந்து உண்ண வேணும்

நீயும் நானும் சேர்ந்து கொண்டு
அப்பாவை சிறிது அரட்ட வேணும்
பொய்யாய் ஒரு கோபம் கொண்டு
அவர் கட்டியனைத்து மகிழ வேணும்

பிடித்த பாடல் சேர்ந்து பாட
30
நிமிட தொலைக்காட்சி வேணும்
முட்டி மோதி கிளம்பும் போதும்
முனங்கள் இன்றி பேசிட வேணும்

பள்ளி செல்லும் நேரம் அதில்
கதைகள் பல பேச வேணும்
என் அசட்டு பேச்சு தெரிந்தும்
நீ அன்பாய் அதை கேட்க வேணும்

மாலை நேரம் அழைத்து செல்ல
பள்ளி ஓடி நீ வர வேணும்
ஏங்கி நிற்கும் எனை கண்டு
உன் மாரனைத்து தூக்க வேணும்

நான் கிரிக்கி வைத்த படங்கள் கூட
நீ ஓவியம் என புகழ வேணும்
பள்ளி கதைகள் நான் கூற
நீ பாசத்துடன் கேட்க வேணும்

கிடைக்கும் அந்த மாலை நேரம்
விளையாடி நான் மகிழ வேணும்
இரவு சமையல் உன்னோடு
உதவி கொஞ்சம் செய்ய வேணும்

நிலா சோறு நீ ஊட்ட எனக்கு
ராஜா ராணி கதைகள் வேணும்
வீட்டுப்பாடம் செய்யும் போதும்
விருப்பமாய் நீ அருகில் வேணும்

விருப்பமில்லா செயல் மறுத்தால்
நீ வருத்தமின்றி ஏற்க வேணும்
இரவு குளிர் நான் போக்க உன்
கதகதப்பு என் அருகில் வேணும்

காலை தொடங்கி மாலை வரை
உன் கண்ணருகில் நான் வேணும்
கவலை மறந்து கவனம் கொண்டு
போற்றி நிதம் வளர்த்திட வேணும்

என் செல்ல அம்மா....................